search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு தீ"

    • வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.

    சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    அப்போது ராக்கெட் நேராக குடிசை வீட்டின் மேல் விழுந்து வெடித்து சிதறியதில் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதுவமாக எரிந்து நாசமானது.

    இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது.

    விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.
    • வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    பனமரத்துப்பட்டி:

    சேலம் மாட்டம் மல்லூர் பேரூராட்டசி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவருடைய மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தமிழரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    இதனால் நந்தினி, கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தமிழரசன், மதுபோதையில் தான் குடியிருந்த வீட்டுக்கு தானே தீ வைத்தார்.

    இதில் வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். இவர் பூட்டிவிட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.

    அருகில் உள்ளவர்கள் வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.
    • ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது.

    ஆவடி:

    ஆவடி ராஜுபாய் நகரில் வசித்து வருபவர் வேல்முருகன். டிரைவர். நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.

    இந்த நிலையில் திடீரென்று ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது. இதனால் வேல்முருகன் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் என ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் எரிய தொடங்கி வீட்டிலும் தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் வாளியில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனடியாக கடைக்குச் சென்று இருந்தவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தனர்.

    மேலும் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு வேல்முருகன் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமிர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது தந்தையும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில், நேற்று மாலை இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் உறவினர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களை வழியனுப்ப வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.

    அப்போது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தீ மளமளவென குடிசையில் பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்து தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய போது சுமிர், அவரது மனைவி உள்பட 5 பேரும் வெளியே நின்றதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ×